728x90 AdSpace

Latest News
Powered by Blogger.

ELECTRICALS

Blog Archive

Jewel Loan

Expos

Sunday 22 September 2013

வருங்கால வைப்பு நிதி: தாம்பரம் தொழிலாளர்களின் கணக்கு விவரம் வலைதளம் மூலம் சமர்ப்பிக்கும் வசதி


வருங்கால வைப்பு நிதி ஆணைய தாம்பரம் மண்டல வைப்பு நிதி ஆணையாளர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
வருங்கால வைப்புநிதி ஆணையம் தொழிலதிபர்கள் தங்கள் உறுப்பினர்களின் கணக்கு எண் மாற்றம் (படிவம்- 13) படிவங்களை கணினி மூலமாக சமர்ப்பிக்கும் முறை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து தொழில் அதிபர்களும் தங்களின் தொழிலாளர்களின் கணக்கு எண் மாற்றும் படிவங்களை கணினி மூலமாக சமர்ப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையொப்பங்களை கணினி முறையாக்கி ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, தாம்பரத்திற்குட்பட்ட நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் தங்களது கையொப்பங்களை கணினி முறையாக்கி ( வகுப்பு 2, வகுப்பு 3 ) வருங்கால வைப்பு நிதி வலைதளத்தில் உள்ள கணக்கு எண் மாற்றும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள  தொடர்பு அலுவலர், மண்டல அலுவலகம், தாம்பரம் தொலைபேசி 044 - 2226 5332, . 94440 46542 ஆகிய எண்களில் அல்லது வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

e-mail  :   sro.tambaram@epfindia.gov.in
Fax      :   044-22261935
Phone :  044-22262002

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வருங்கால வைப்பு நிதி: தாம்பரம் தொழிலாளர்களின் கணக்கு விவரம் வலைதளம் மூலம் சமர்ப்பிக்கும் வசதி Rating: 5 Reviewed By: Unknown